இந்தியாவின் இளம் டி20 கிரிக்கெட் வீராங்கனையான ஷபாலி வெர்மா இளம் வயதில் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஆணாக மாறி கிரிக்கெட் பயிற்சியை பெற்றார் என தெரியவந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தின் Rohtak நகரை சேர்ந்த இளம் வீராங்கனையான ஷபாலி கடந்த செவ்வாய்க்கிழமை தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 46 ஓட்டங்கள் விளாசினார்.

அவரின் பங்களிப்பு காரணமாக இந்தியா 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் 15 வயதாகும் தனது மகள் ஷபாலியை மகன் என்று கூறி சிறுவயதில் கிரிக்கெட் அகடாமியில் சேர்த்ததாக அவரது தந்தை சஞ்சீவ் வெர்மா தெரிவித்துள்ளது ஆச்சரியமடைய வைத்துள்ளது.

சஞ்சீவ் கூறுகையில், Rohtak நகரில் உள்ள அனைத்து கிரிக்கெட் அகாடமியும் பெண் என்ற காரணத்தால் ஷபாலிக்கு பயிற்சி அளிக்க மறுத்துவிட்டன.

நான் எவ்வளவோ கெஞ்சியும் யாரும் அதை காது கொடுத்து கேட்கவில்லை.

அதனால் என் மகள் ஷபாலியின் தலைமுடியை வெட்டி சிறுவன் போல மாற்றி கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்தேன்.

ஷபாலியை பெண் என கண்டுபிடித்து விடுவார்களோ என முதலில் பயந்தேன், ஆனால் 9 வயதில் ஆண் மற்றும் பெண் சிறார்கள் ஒரே மாதிரி இருப்பார்கள் என்பதால் யாரும் கண்டுபிடிக்கவில்லை.

என் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அப்போதெல்லாம், உன் மகள் ஆண்களுடன் சேர்ந்து விளையாடுகிறாளே, பெண்களுக்கு கிரிக்கெட்டில் எதிர்காலம் இல்லை என விமர்சிப்பார்கள்.

ஆனால் அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

என் இளைய மகளும் தற்போது கிரிக்கெட் விளையாட தொடங்கியுள்ளார் என கூறியுள்ளார்.

54 Shares