இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணிக்கு 234 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடலைட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் டேவிட் வேர்னர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் ஆரன் பின்ச் 64 ஓட்டங்களையும் மெக்ஸ்வெல் 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு போட்டியில் வெற்றிபெற 234 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

23 Shares