இலங்கை பிரதான செய்திகள்

பேராதனைப் பல்கலைக்குத் தெரிவாகியிருந்த மாணவன் மூங்கிலாறு விபத்தில் பரிதாபச் சாவு!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியிருந்த மாணவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அதிவேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியிருக்கின்றது.

சம்பவத்தில் மூங்கிலாறு தெற்கு, உடையார்கட்டைச் சேர்ந்த ஆனந்தராசா பிரசன்னா (வயது – 24) என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

அவரை மீட்ட மக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவாகியிருந்தவர் என்று தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வேலைக்குச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை – நடந்தது என்ன? கதறும் மனைவி

venuja

யாழ்.பாசையூர் அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் இருந்த பயங்கரம் !

மயூனு

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு மஹிந்தவுக்கு ஐ.நா மீண்டும் எச்சரிக்கை !

மயூனு

Leave a Comment