திண்டிவனம் அருகே தனது திடீரெனத் தனது தந்தை இறந்தததால் அவரது சடலத்திடம் ஆசிர்வாதம் வாங்கி மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

திண்டிவனத்தைச் சேர்ந்த அலக்சாண்டர் என்பவர் மயிலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

அதேப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் ஜெகதீஸ்வரி என்ற பெண்ணைக் காதலித்துள்ளார்.

இதை இருவீட்டாரிடமும் சொல்லி இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் அடுத்தமாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்ய இருந்தார்.

ஆனால் திடீரென்று நேற்று அலக்சாண்டரின் தந்தை தெய்வமணி உடல்நலக் குறைவார் இறந்துள்ளார்.

தனது தந்தை மேல் மிகுந்த பாசம் வைத்திருந்த அலக்சாண்டர் அவரது ஆசிர்வாத்தோடுதான் தன் திருமணம் நடக்க வேண்டுமென்று நினைத்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத இந்த சம்பவத்தால் மனமுடைந்த அவர் தனது உறவினர்களையும் ஜெகதீஸ்வரியின் வீட்டாரையும் அழைத்து உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க தெய்வமணியின்  உடலுக்கு முன்னர் ஜெகதீஸ்வரிக்குத் தாலி கட்டியுள்ளார் அலக்சாண்டர்.

34 Shares