பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் உரைக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்களில் காங்கிரஸை விமர்சனம் செய்து பேசினார். காங்கிரஸ் இல்லாத பாரதம் என பா.ஜனதா கூறுவதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி காங்கிரஸ் விவகாரத்தில் மகாத்மா காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றுதான் மகாத்மா காந்தி பரிந்துரை செய்தார். எனவேதான் என்னுடைய கோஷம், காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பதாகும். மகாத்மா காந்தியின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றுகிறேன் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.