பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள கட்சிகளின் முகவருமான அங்கஜன் இராமநாதன் தான் வாழ வேண்டும் என்பதற்காக சிங்கள தரப்புகளுக்கு அடிக்கடி தன்னை கிளைவிட்டு கிளை தாவிக்கொண்டே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் எந்த வலிகளையும் உணராத இவர் தீடிர் என்று அரசியலுக்கு வந்து அப்பாவி தமிழர்களின் பலவீனத்தை பயன்படுத்தி சிங்கள முகவராக இயங்கி வருகின்றதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலை வாய்ப்பை பெற்று தருகின்றேன் அபிவிருத்தி செய்கின்றேன் என்று கூறி தனது சிங்கள முகவர் அரசியலை அங்கஜன் வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் கடந்த 2015 ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அரசுக்காக கடுமையாக பரப்புரைகளை மேற்கொண்டு வந்தவர் தன்னை மகிந்தவின் செல்லப்பிள்ளையாக மக்கள் மத்தியில் கட்டிகொண்டு திரிந்தார்.

அதன்பின்னர் மகிந்த தேர்தலில் தோற்றவுடன் தனது கட்சி அலுவலகத்தில் பெரிதாக வைக்கப்பட்ட மகிந்தவின் கட்அவுட்டை அகற்றிவிட்டு மறுநாள் மைத்திரியின் காடஅவுட்டை வைத்து மைத்திரிக்கு வால்பிடித்துகொண்டு திரிந்தது உலகம்றிந்த கதை எனவும் சுட்டிகாட்டியுள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் தன்னின மக்களிற்கோ அல்லது தனக்கோ எந்த கொள்கையும் இன்றி சிங்கள முகவராக இயங்கிவரும் இவர் ஏமாற்று அரசியலை செய்து தன் இனத்தையும் விற்று அரசியலை செய்து வருவதாகவும் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இம்முறை கோத்தபய தோற்று சஜித் வென்றால் தனது கட்சி அலுவலகத்தில் சஜித்தின் கட்டவுட்டை வைத்து அவருக்கும் வால்பிடிக்ககூடும் என்றும், அவதானிகள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

68 Shares