மட்டக்களப்பு மாநகரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகத் திகழும் புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்த விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 19ம் திகதி சித்திரைப் பூரணை தினத்தில் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜா சந்திரலிங்கக் குருக்கள் தலைமையிலான குருக்கள்களினால் இவ் உற்சவம் நிகழ்த்தப்படவுள்ளதுடன் பல்வேறு சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெறும்.

முதலாம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் உற்சவம் 05ம் நாள் மாம்பழத் திருவிழா, 06ம் நாள் சங்காபிஷேகம், 08ம் நாள் திருவேட்டைத் திருவழா, 09ம் நாள் தேர்த்திருவிழா, 10ம் நாள் தீர்த்தோற்சவம் என பல்வேறு அம்ச பூசை நிகழ்வுகள் இதன் போது இடம்பெறும். இதன் பிற்பாடு கொடியிறக்கம், பூங்காவனத் திருவிழா, வைரவர் பூசை போன்றனவும் இடம்பெறவுள்ளன. திருவிழா காலங்களில் அலங்கரிக்கப்பட்ட எழுந்தருளிகள் ஆலயத்தின் உள்வீதி, வெள்வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புத காட்சியும் இடம்பெறும்.

புளியந்தீவு பிரதேசத்தின் தொண்மையை இவ்வாலயம் பறைசாற்றி நிற்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

0 Shares