தனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி எழுத்து மூலம் அறிக்கை ஒன்றை இராணுவத்திற்கு அனுப்பிய பின்னரே கோத்தபாய ராஜபக்ச இராணுவத்தில் இருந்து விலகியதாக கலாநிதி. தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

அந்த காலத்தில் யுத்தத்திற்கு பயந்து இராணுவத்தில் இருந்து தப்பிச் செல்ல அவர் இப்படியான நடவடிக்கை எடுத்தார்.

இப்படியான நபரை இலங்கையின் ஆட்சியாளராக தெரிவு செய்ய தேவையில்லை எனவும் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.

117 Shares