மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட மாணவர்களுக்கான சான்றுதல்வழங்கும் நிகழ்வு

களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் தோட்டபகுதிகளை சேர்நத தொழிலாளர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களில் ஒன்றான மனிதவள முகாமைத்துவ கற்கை நெறியில் ஈடுபட்ட
மாணவர்களுக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு 13.03.2019.புதன் கிழமை டிக்கோயா மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது இதன் போது இந்த பயிற்சி நெறியில் களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தின் கிழ் இயங்கும் அட்டன் பகுதியில் உள்ள தோட்டபுறங்களில் 08 தோட்டபகுதிகளில் உள்ள
27மாணவர்களுக்கு பயிற்சி வழங்கபட்டு சான்றுதல்கள் வழங்கி வைக்கபட்டது

இந்த கற்கை நெறி பயிற்சியினை கண்டி என்.ஜ.பி.எம்.நிறுவனம் நடாத்தியதோடு பெரண்டினா மற்றும் வூஸ்க் ஆகிய நிறுவனங்களும் இணைந்து கொண்டதோடு பேராதனை
பல்கலை கழக விரிவுரையாளர் கலாநிதி அவர்களும் பங்களிப்பை வழங்கியதோடு இந் நிகழ்வில் தோட்ட முகாமையாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது