மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் ஏற்பாட்டில் ‘அன்பின் காவியம்’ திருப்பாடுகளின் திருக்காட்சி நிகழ்வு நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் கலையருவி வளாகத்தில் இடம் பெற்றது.

முதல் நாள் நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெனாண்டோ ஆண்டகை, மன்னார்  மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அருட்பணியாளர்கள் ,அருட் சகோதரிகள் ,ஆயிரக்கணக்கான இறைமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.