இலங்கை

மன்னார் வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ளநீரில் மூழ்கியது ~ 30 குடும்பங்கள் இடம்பெயர்வு!{படங்கள்}

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர்  இடம்பெயர்ந்து  வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 168 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாபேரிதன்ன மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் – வேலுகுமார் எம்.பி. அரசாங்கத்திடம் விடுக்கும் அவசர கோரிக்கை!

மயூனு

சஜித்தையும் விரைவில் கைது செய்வோம் ~நாமலின் அதிரடி தகவல் !

மயூனு

சாய்ந்தமருதில் யானை வேலி அமைக்க திட்டம்

venuja

Leave a Comment