இலங்கை

மருத்துவர் சாபிக்கு புதிய சிக்கல் ~மீண்டும் முதல்ல இருந்து !

சிங்கள பௌத்த தாய்மார்கள் 4000 பேருக்கு கருத்தடை செய்ததாக குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்ய புதிய அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழங்கு நேற்று முன்தினம் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, சம்பவம் தொடர்பான மீண்டும் சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைத்தியர் சாபிக் CID காவலில் மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் இந்த கருத்தடை நாடகம் தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சில அரசியல்வாதிகள் தங்களது முக்கிய அரசியல் திட்டத்தை சமீப காலங்களில் தொடங்கியுள்ளனர் என்பதற்கான அறிகுறியாகும், அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் சாபிக்கை காண்பித்து வெற்றிபெற தயாராகுவது இதில் இருந்து உறுதியாகிறது.

இவ்வாறு விசாரணை புதிதாக ஆரம்பிக்கப்படுவது வைத்தியர் சாபிக்கினால் கருத்தடை செய்ததாக புகார் அளித்த தாய்மார்கள் சிலர் கருவுற்றிருக்கும் பின்னணியில் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் குப்பைக்கு தீ வைக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த விபரீதம் !

மயூனு

வாய்க்கால் ஒன்றில் பிக்குவின் சடலம் ~குழப்பத்தில் பொலிஸார் !

மயூனு

ராஜிதவின் முக்கிய புள்ளியின் வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார் !

மயூனு

Leave a Comment