இந்தியாவில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மனிஷா குமவாத் (25). மருத்துவ கல்லூரி மாணவியான இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மனிஷா இருந்த அறை வெகுநேரமாக திறக்கப்படாத நிலையில் உள்ளே சென்று சக மாணவிகள் பார்த்தனர்.

அப்போது அவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மனிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து கடிதம் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

123 Shares