பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் வனபகுதியில் மரை வேட்டையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்து கைது சம்பவம்
10.02.2019.ஞாயிற்றுகிழமை மாலை 05மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இதேவேலை மேலும் ஒரு சந்தேக நபரை கைது
செய்செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட்டு வருவதாக  பொலிஸார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ சென்விஜயன்ஸ் பகுதியில் வேட்டையாடிய மறை இறைச்சினை பொகவந்தலாவ கெம்பியின் பகுதிக்கு விற்பனை
செய்வதற்காக முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யபட்டுள்ளதுடன் இறைச்சியினை ஏற்றிசென்ற முச்சக்கர வண்டி மற்றும் மறையின் தோல் 20கிலோ இறைச்சியும் கைபற்றபட்டதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதேவேலை வேட்டையாடபட்ட மறையின் தலைபகுதியை சந்தேக நபர்கள் வனபகுதியில் வெட்டி விசியதாகவூம் தப்பி சென்ற சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் 11.02.2019.திங்கள் கிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது