கிர்கிஸ்தான் நாட்டில் 16 வயது சிறுமியை 35 வயது நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ள சம்பவமானது இணையதளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிர்கிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு முன்பு நடைபெறும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில், 16 வயது சிறுமி தனக்கு திருமணம் வேண்டாம் என அங்கிருந்த அனைவரிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார்.

இந்த காட்சிகள் தலைநகர் பிஷ்கெக்கிற்கு மேற்கே 125 மைல் தொலைவில் உள்ள தலாஸ் என்ற நகரத்தில் படமாக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், அந்த சிறுமி பெண்களால் கடத்தி வரப்பட்டு 35 வயது நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தரப்பில் இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அறிக்கைகளின் படி, ஆலா கச்சு’ என்ற பாரம்பரியத்தின் கீழ், அதாவது ‘அழைத்துச் சென்று தப்பி ஓடு’ என்கிற முறையில் சிறுமியை கடத்தி ஆணுக்கு திருமணம் செய்து வைப்பதாகும். கிர்கிஸ்தான் நாட்டில் திருமணத்திற்கான வயது 17 ஆக இருக்கும் போது பல இடங்களில் இதுபோன்ற சட்டவிரோதமான நிகழ்வுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 Shares