மாகாண சபைகளை பலப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ வழி அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அமைச்சர் கூறினார்.
கண்டியில் நேற்று  இடம்பெற்ற மத நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் மாகாண சபைகள் மேலும் பலப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

உத்தேச அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாணங்களையும் இணைத்து பொலிஸ் அதிகாரங்கள் அதற்கு பகிரப்படும் என்று சில விஷமிகள் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களை மறுத்த அமைச்சர் உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் ஏற்கனவே பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள கௌரவம் மற்றும் அந்தஸ்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாது என்று உறுதியளித்தார்.

0 Shares