சினிமா

மாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டும் இத்தனை கோடிகளா, பிரபல சினிமா விமர்சகர் கூறிய உண்மை தகவல்

தளபதி விஜய் தன் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கின்றார். இவர் எந்த படம் நடித்தாலும் விமர்சனம் என்பதை தாண்டி படம் வசூல் சாதனை செய்து வருகின்றது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல்,சர்கார்,பிகில் எல்லாம் ரூ 250 கோடிகளை தாண்டி வசூல் சாதனை செய்து வருகின்றது.

இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் தற்போது நடித்துள்ள படம் மாஸ்டர், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸிற்கு ரெடியாகி வருகின்றது.

தற்போது பிரபல சினிமா விமர்சகர் மற்றும் முன்னணி பத்திரிகையாளர் பிஸ்மி அவர்கள், நம் சினிஉலகம் தளத்தில் பேட்டிக்கொடுத்துள்ளார்.

அதில் அவர் மாஸ்டர் படத்தின் வியாபாரம் மட்டுமே ரூ 230 கோடி, இவை பிகில் படத்தை விட ரூ 30 கோடி அதிகம் என்று கூறியுள்ளார்.

அதோடு விஜய் தற்போது ரஜினியை விட வியாபாரத்தில் முன்னேறிவிட்டார் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை என அடித்துக்கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஏதும் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிகின்றது.

Related posts

கிறிஸ்துமஸ் என்றால் இதயத்தை திறப்பது – மொத்தத்தையும் திறந்து காட்டிய மீரா மிதுன்..! – விளாசும் ரசிகர்கள்..!

venuja

மலையேறும் கமலின் மானம் ! கவர்ச்சியில் அக்காவை தூக்கி சாப்பிட்ட அக்சரா ஹாசன்

venuja

பிரபல நடிகர் தற்கொலை – காரணம் என்ன?

venuja

Leave a Comment