உலக செய்திகள் பிரதான செய்திகள்

மீண்டும் சிறை திரும்பினார் பேரறிவாளன்! – கண்ணீர்மல்க வழியனுப்பிவைத்தார் அற்புதம்மாள்

இரண்டு மாதம் பரோல் முடிந்து சென்னை புழல் சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனை, அவரது தாயார், அற்புதம்மாள் கண்ணீர்மல்க வழியனுப்பிவைத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள ஏதுவாக பரோலில் வெளியே வந்தார்.

இரண்டு மாத பரோல் முடிவடைந்த நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளனின் இல்லத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய பொலிஸாரின் பாதுகாப்புடன் அவர் மீண்டும் புழல் சிறைக்கு நேற்று அழைத்துச் செல்லப்பட்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அற்புதம்மாள், தமிழக அரசு விரைவில் தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என உருக்கத்துடன் கோரிக்கை விடுத்தார்.

Related posts

வீகன் உணவால் குழந்தை மரணம்~ பெற்றோர் கைது!

மயூனு

நான் செல்லும் போது வீதிகள் இப்படித்தான் இருக்க வேண்டும் – கோத்தபாய அதிரடி

venuja

டிரம்ப் என்னை முத்தமிட அழைத்தார் – பெண் நிருபர் புகார் – அதிர்ந்தது அமெரிக்கா

venuja

Leave a Comment