நம்ம வீட்டு கல்யாணம்’, ‘காஃபி வித் டிடி’ போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி.

இவரை டிடி என்றே செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். தற்போது, சின்னத்திரை தாண்டி சினிமாவிலும் கால் பதித்து வருகிறார் DD. அழகான பேச்சால், நிகழ்சிகளுக்கு அழகு சேர்க்கும் இவரது சொந்த வாழ்கைஅவ்வளவு சிறப்பாக இல்லை.

தனது, நண்பரை திருமணம் செய்து கொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் பெற்றார். இதனை தொடர்ந்து, மீண்டும் தொலைகாட்சி தொகுப்பாளினியாகவே பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரபல நடிகர் ராணா டக்குபதியுடன் கிரிக்கெட் மைதானத்தில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதும், ஒரு நண்பரை போல மற்றும் சகோதரனை போன்ற பண்புள்ள ராணா டக்குபதிக்கு நன்றிகள். உங்களின் உபசரிப்புக்கு நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

75 Shares