இலங்கை

முப்படையையும் முகாம்களுக்குள் முடக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

வீதிச் சோதனை நடவடிக்கைகள் மற்றும் மேலதிக கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை முகாம்களுக்குள் முடக்க அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல் பணிகளுக்குத் தேவைப்பட்டால் மாத்திரமே முப்படையினர் பயன்படுத்தப்படவுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வீதிகளில் அநாவசிய சோதனைகளில் முப்படையினர் ஈடுபடுவதால் மக்கள் அச்சமுறும் நிலைமை ஏற்படும் என்பதால் படைகளை முகாம்களுக்குள் முடக்குமாறு இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் விடுத்த கோரிக்கையையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை முப்படையினர் முகாம்களில் உஷார் நிலையில் வைக்கப்படுவார்கள் என்றும், தேவைப்படின் அவர்களின் உதவிகளைப் பொலிஸ்மா அதிபர் கோரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேள, அரச போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 1500 பஸ்களை தேர்தல் கடமைகளுக்குப் பயன்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேவைப்படின் விமானப்படையின் உதவியைப்  பெறவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தலை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு மக்களுக்கு திருமதி ஆளுநர் வழங்கிய உறுதி மொழி !

மயூனு

What’s The Difference Between Vegan And Vegetarian?

admin

மண் கடத்தல்காரர்களை துரத்திய யாழ் மக்கள் ~மண்ணை கொட்டிவிட்டு தலைதெறிக்க ஓடிய கொள்ளை கும்பல் !

மயூனு

Leave a Comment