வவுனியாவில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கணவன் மற்றும் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த சுமங்கலி என்பவராவார்.

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து தீப்பற்றிய நிலையில் 2019.07.12 அன்று மீட்கப்பட்டனர்.

வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. இருவரும் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் இன்றைய தினம் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

411 Shares