சாதாரண தரப்பரீட்வையில் தோற்றவந்த முஸ்லிம் மாணவிகளுக்கு ஏற்பட்ட அசாதாரண நிலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டம் கெக்கிரால கல்வி வலயத்திற்குட்பட்ட மடாட்டுகம, அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்பட்ட முஸ்லிம் பாடசாலை ஒன்றில் மேற்படி சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றிருக்கிறது.

சாதாரண தரப்பரீட்சையின் சமய பாடத்திற்கான பரீட்சை இன்று இடம்பெற்றது.

இதில் இஸ்லாமிய பரீட்சையில் தோற்றுவதற்காக இன்று காலை பரீட்சை மண்டபத்திற்கு சென்ற முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அகற்றுமாறு பரீட்சை நிலையப் பொறுப்பாளர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பரீட்சை நிலையப் பொறுப்பதிகாரிகளின் இந்த செயற்பாட்டினை மாணவர்களின் பெற்றோர் கண்டித்து வருவதோடு இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை அவசியம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ வலியுறுத்தினார்.