விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளை கதற விட்ட கோலி !

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, சிம்ரொன் ஹெட்மியர் 56 ஓட்டங்களையும், எவீன் லீவிஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியா அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது இந்திய அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களையும், லோகேஷ் ராகுல் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கெர்ரி பியர் 2 விக்கெட்டுகளையும், செல்டோன் கொட்ரேல் மற்றும் கிரன் பொலார்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை திருவாணந்தபுரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related posts

என்னுடைய 400 ரன் சாதனையை ஒருவேளை இவர்களால் முறியடிக்க முடியும்… . லாரா

venuja

2-வது 20 ஓவர் கிரிக்கெட் – இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்

venuja

இந்தியாவில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகமிக அதிகம் – பாக். கிரிக்கெட் போர்டு தலைவர்

venuja

Leave a Comment