மட்டக்களப்பு வாழசை;சேனை பிரதான வீதி வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி மோதி முச்சக்கரவண்டி வீதியை விட்டுவிலகி வீதியால் நடந்து சென்றவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் சம்பவதினமான நேற்று மாலை 4.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் இருந்து தமது விடுதிகளுக்கு வீதியால் இருமாணவிகள் சென்று கொண்டிருந்தபோது  மோட்டார்சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கள்ளன நிலையில் முச்சக்கரவண்டி வீதியைவிட்டுவிலகி வீதியின் அருகில் நடந்து சென்ற மாணவிகளுடன் மோதி விபத்துக்குள்ளானது 
இதில் நீலாவணை, அக்கரைப்பற்று கண்ணகிபுரத்த்தைச் சேர்ந்த 2 மாணவிகளும் மோட்டார்சைக்கிளை செலுத்தியவர் உட்பட 3 படுகதயமடைந்த நிலையில் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மோட்டார்சைக்கிளை செலுத்தியவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொவிசார் தெரிவித்தனத் 
இது தொடர்பான விசாரணைகனை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர் .