இலங்கை

யானைக்கட்சி என் தம்பிக்கு எதிராக தொடர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறது ~பொங்கி வெடித்த அண்ணன் !

ஐக்கிய தேசியக்கட்சி,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சதித்திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ  குற்றம் சுமத்தியுள்ளார்

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் தொடர்பாக சரியான தகவல் வெளியானதன் பின்னர், அதனுடன் தொடர்புடைய சதிகாரர்கள் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் அரசியலில் இருந்து விடைபெற வேண்டிய நிலைமை ஏற்படும்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியது முதல் அவர் அதிகாரத்துக்கு வந்ததன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு சதி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

இதற்கு காரணம், கடந்த அரசாங்கத்துக்கு செய்ய முடியாமல் போன பல பாரிய வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம்  ஆட்சிக்கு வந்தவுடனே செய்ய ஆரம்பித்துள்ளமையே ஆகும்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்து காணப்படுகின்றது. இதனை கட்டியெழுப்புவது சாத்தியமற்ற விடயமாகும்.

எனவேதான் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பெரும்பாலானோர் எம்முடன் கைகோர்க்க தற்போது தயாராகியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புத்தளத்தை வெளுத்து வாங்கும் கன மழை – ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு

venuja

இலங்கையில் மீண்டும் காட்டாட்சி! – ரணில் ஆவேசம்

user02

ஆட்சி மாற்றத்தின் எதிரொலி ~யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை!

மயூனு

Leave a Comment