இலங்கை

யாழில் வேலை விட்டு வீட்டுக்கு வந்த மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

மீசாலை மேற்கு பகுதியில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வேலுப்பிள்ளை சதாசிவம் (வயது 84) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்றைய தினம் வீட்டில் உள்ள அனைவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில் முதியவர் தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். நேற்று மதியம் மகள் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் தந்தையார் கிணற்றிலிருந்து சடலமாக காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அலுவலர் என்.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டார்.

இன்றைய தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

தொடரும் வன்முறை சம்பவங்கள் இதுவா கோட்டா ஆட்சி ~ புத்தளத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்!

மயூனு

கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் தொடர்பான முக்கிய தகவல் !

மயூனு

கிளிநொச்சியில் உயிருக்கு போராடிய சாரதி ~ போராடி காப்பாற்றிய இளைஞர்கள்!

மயூனு

Leave a Comment