பங்களாதேஷ் அணிக்கு எதிராக 2-வது டெஸ்ட் போட்டியில் ரோஸ் டெய்லரின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 432 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து- பங்களாதேஷ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. பங்களாதேஷ் முதல் இன்னிங்சில் 211 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 38 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 432 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்தியது.

முன்னாள் தலைவர் ரோஸ் டெய்லர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 200 ஓட்டங்கள் குவித்தார். அவரது 3-வது இரட்டை சதமாகும். நிக்கோலஸ் சதம் அடித்தார். அவர் 107 ஓட்டங்களும், தலைவர் வில்லியம்சன் 74 ஓட்டங்கள் எடுத்தனர். 221 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பங்களாஷே அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ஓட்டங்களில் 3 விக்கெட் இழந்தது.

இன்று போட்டியின் இறுதி நாளாகும்.

0 Shares