பிரித்தானியாவில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் 787 ரக மிகப்பெரிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது.

இன்று 300 பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பிக்க தயாராக இருந்த இந்த விமானம் மதில் மீது மோதியமையினால் பின்நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன் போது பாரிய சத்தம் ஏற்பட்டமையினால் பயணிகள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட ஆரம்பித்துள்ளனர். எனினும் அவசர சேவை பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை அமைதிப்படுத்தியுள்ளனர்.

லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து நிவ்யோர்க் செல்லவிருந்த நோர்வே நாட்டிற்கு சொந்தமான DI7017 என்ற விமானம் சேதமடைந்துள்ளதனை விமான சேவை நிறுவனத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

“விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளும் காயமின்றி பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமையாகும். மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஏற்பட்ட சிரமத்திற்கு எங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

33 Shares