பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ள வனிதாவை பிரபல நடிகையான ஸ்ரீபிரியா வசை பாட தொடங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹோட்டல் டாஸ்க்கின் போது வனிதா விருந்தாளி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கையோடு தனது வேலையை தொடங்கிய வனிதா சண்டையை தூண்டிவிட்டு ஆட்டம் போட்டார்.

வனிதா வந்த பிறகு பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரளயத்தில் கையை அறுத்துக்கொண்டு வெளியேறினார் மதுமிதா. கடந்த வாரம் வரை போட்டியின் வெற்றியாளராக இருந்த மதுமிதாவை அழகாக வெளியே தூக்கிப்போட பேருதவியாக இருந்தார் வனிதா.

ரணகளம்
வனிதா வெளியே போன பிறகு அமைதியாக இருந்த பிக்பாஸ் வீடு அவர் மீண்டும் வந்த பிறகு ரணகளமாய் மாறியது. வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்ததை ரசிகர்கள் கொஞ்சமும் விரும்பவில்லை.

டாஸ்க் முடிந்தும்
பல பிரபலங்களும் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததை விரும்பவில்லை. டாஸ்க்தான் முடிந்து விட்டதே வனிதா ஏன் இன்னும் பிக்பாஸ் வீட்டை காலி செய்யவில்லை என கேட்டு கருத்துக்களை பதிவிட்டனர் நெட்டிசன்கள்.

நோ நாமினேஷன்
இந்த பேச்சு அதிகரிக்கவே நேற்று முன்நாள் எபிசோடில் வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக அறிவித்தார் பிக்பாஸ். இதனால் இந்த வாரம் அவரை நாமினேட் செய்ய முடியாது என்றும் கூறிவிட்டார் பிக்பாஸ்.

வம்பிழுத்த வனிதா
இதைத்தொடர்ந்து இந்த வாரம் யாரை காலிபண்ண போறாரோ என உதறலில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஸ்கூல் டாஸ்க்கின் போது டீச்சரான கஸ்தூரி, மாணவியான வனிதாவை வாத்து என்று கூறிவிட்டார் எனக் கூறி வம்பிழுத்தார்.

மன்னிப்பு
இதைத்தொடர்ந்து ஸ்ட்ரைக், அது இது என ஆரம்பித்த வனிதா மற்ற மாணவ மாணவிகளையும் இதில் கூட்டு சேர்க்க முயற்சித்தார். இதைத்தொடர்ந்து வனிதாவிடம் மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி.

சண்டை போட்ட வனிதா
இதைத்தொடர்ந்து லிவிங் ஏரியாவில் இருந்த மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் என்ன மாதிரியான கேலியாக இருந்தது என்று கேட்டார் கஸ்தூரி. இதனால் ஆத்திரமடைந்த வனிதா, அவருக்கே உரிய பாணியில் கடுமையாக சத்தம்போட்டு கடுமையான பிரயோகித்து சண்டை போட்டார்.

ஸ்ரீபிரியா டிவிட்
வனிதா சண்டை போட்டதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பாளருமான ஸ்ரீபிரியா, பிக்பாஸ் குறித்து டிவிட்டியுள்ளார்.

ஒரு வாரமாக போர்க்களம்
ஏற்கனவே வனிதா குறித்து பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ள ஸ்ரீபிரியா, ஒரு நாளைக்கு ஒரு சண்டையாவது போட்டே ஆகவேண்டும் போல் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வாரமாக போர்களம் தான் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீபிரியா.

ஒரு வாரமாய்
கடந்த சீசன்களின் போது பிக்பாஸ் குறித்து டிவிட்டி வந்த ஸ்ரீபிரியா இந்த முறை அவ்வளவு இன்ட்ரஸ்ட் காட்டவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாய் பிக்பாஸ் குறித்து டிவிட்ட தொடங்கிவிட்டார் ஸ்ரீபிரியா.

25 Shares