வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்டபதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நேற்றுகாலை அரசஅதிபர் எம்.கனீபாதலைமையில் நடைபெற்றது.

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலின் படி பொதுநிர்வாக உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேஜவர்த்தன அவர்களின் திடசங்கற்பகத்தின் படி கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதினின் பங்குபற்றுதலுடன் காலை 9.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் பொதுமகன் ஒருவரது காணிக்குரிய ஆவணங்கள் ஒரேநாளில் பதிவுசெய்யபட்டு வழங்கிவைக்கபட்டது. குறித்த சேவை ஆரம்பிக்கபட்டதன் நினைவாக மாவாட்டசெயலக வளாகத்தில் மரம் ஒன்றும் நாட்டிவைக்கபட்டது.  

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்கஅதிபர் தி.திரேஷ்குமார். பிரதேச செயலாளர்களான க.சிவகரன்,க.உதயராஜா,பரந்தாமன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக் , வவுனியா நகரசபைஉறுப்பினர்கள் ,பிரதேசசபை தலைவர்களான இ.தணிகாசலம், ஆ.அந்தோணி , சட்டத்தரணிகள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.