வவுனியாவில் சூரிய சக்தியில் இரந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய மின்கலத்தொகுதிக்கட்டமைப்பு இன்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயகவினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா மாமடுவில் தனியார் நிறுவனமொன்றினால் 380 மிலலியன் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட குறித்த சூரிய சக்தியில் இரந்து மின்சாரத்தை பெறும் கட்டமைப்புத் தொகுதியானது நாளாந்தன் 7000 யூனிட் மின்சாத்தினை உற்பத்தி செய்து வழங்கக்கூடியதுடன் சுமார் 10 ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ளது.

மினசாரத்தினை குறைந்தவிலையில் பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் சூரி சக்தியில் இருந்து மின்சாரத்தினை பெறும் பெறிமுறைகள் அரசாங்கத்தின் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவில் குறித்த கட்டமைப்பு திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீளக்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், குறித்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், வவுனியா நகரசபை உறுப்பினர் அப்துல் பாரி, ரிசாட் பதியுர்தீனின் பிரத்தியேக செயலாளர் முத்து முகமது உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.