இலங்கை

வவுனியாவில் மின்சாரம் துண்டிப்பு~பொதுமக்கள் விசனம்!

வவுனியாவில் இன்று காலை 8மணிமுதல் நகர் பகுதி உட்பட பல பகுதிகளில் ஒழுங்கான முறையில் அறிவித்தல் வழங்கப்படாது  மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியிலுள்ள  வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் அசௌகரியங்களுக்குள்ளாகிள்ளனர். 
மின்சார சபையின் இச் செயற்பாடு காரணமாக பல வியாபார நிலையங்களில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெறுவதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென முன் அறிவித்தல்‌ ஒழுங்கான முறையில் அறிவித்தல் வழங்கப்படாது மின்சாரம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும்  வவுனியாவில் பல இடங்களில் இவ்வாறாக திடீரென முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டு  வழங்கப்படவில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பல பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்படுவதுடன் இச் செயற்பாட்டினால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய அதிகாரிகள் மின்தடைகுறித்து ஊடகங்களுக்கும் உரிய முறையில் முன்னறிவித்தல் விடுத்து மின்துண்டிப்பை மேற்கொள்ளுமாறும் பொதுமக்கள்  தெரிவித்துள்ளனர்.

Related posts

கோட்டா உட்பட குடும்பத்தினரை கொலை முயற்சி – சந்தேகநபர் CID யிடம் ஒப்படைப்பு!

மயூனு

சஜித் வேண்டும்~ கருவுக்கு 70 பேர் கடிதம்!

மயூனு

மன்னார் மாவட்ட கிராமங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

venuja

Leave a Comment