வவுனியா புளியங்குளத்தில் 9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவர் கைது

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்றிரவு 15.03.2019) 11.00 மணியளவில் 9 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புளியங்குளம் நகர் பகுதியில் நேற்றையதினம் புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து ஒமந்தை பொலிஸாரும் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை மறித்து சோதனையிட்ட சமயத்தில் 9கிலோ கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்திருந்த நபரோருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜ- ஏல பகுதியினை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.