வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவமானது இன்றைய தினம் (07.06) மிகவும் அமைதியான முறையில் இராணுவ பாதுகாப்பு மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.


வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட தூக்கு காவடிகள், பறவை காவடிகள், பாற்செம்புகள்,தீச்சட்டி, காவடிகள் போன்றன வவுனியா நகர வீதி வழியாக ஆலயத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.


அத்துடன் ஆலயத்தில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இரவு பொங்கலுக்கான மடப்பண்டமெடுக்கும் கிரியைகள் இடம்பெற்று, விஷேட பூஜையுடன் சாமி உள்வீதி வலம்வந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து அடியார்க்கு அருள்பாலித்து பூஜைகள்  இடம்பெறும் எனவும் ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.

49 Shares