அறிவுரை என்பது சொல்வதற்கு மிகவும் எளிதானதாக இருக்கலாம், ஆனால் அதனை கேட்பதோ, பின்பற்றுவதோ மிகவும் கடினமான ஒன்றாகும். ஒருவேளை உங்களிடம் யாராவது அறிவுரை கேட்டால் நீங்கள் அவர்களுக்கு பயனுள்ள அறிவுரைகளை கூறுகிறீர்களா? அனைவராலும் சிறந்த அறிவுரையாளராக இருக்க முடியாது.

சிலரால் மட்டுமே உபயோகமான அறிவுரைகளை வழங்க முடியும். நீங்கள் கூறும் அறிவுரைகள் நல்லதா அல்லது கெட்டதா என்பதை உங்களின் குணங்கள்தான் கூறும். தவறான அறிவுரைகள் எங்கும் நிறைந்திருக்கிறது, அதனை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்குத்தான் பிரச்சினை. தவறான அறிவுரைகள் கூறுவதற்கு உங்களின் ராசிக் கூட காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் விளைவுகள் தெரியாமல் அறிவுரைகள் கூறுவார்கள் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மற்றவர்களுக்கு என்ன தேவை என்று சிந்தித்து அவர்களுக்கான சரியான அறிவுரை என்னவென்பதை கூறும் அளவிற்கு பொறுமை இல்லை. இவர்கள் எப்பொழுதும் தங்கள் மூளையில் இருப்பதைத்தான் பேசுவார்கள், உடனடி தீர்வை சிந்திப்பார்களே தவிர நிரந்தர தீர்வை பற்றி சிந்திக்க மாட்டார்கள். சாதக, பாதகங்களை பற்றி இவர்கள் யோசிக்க மாட்டார்கள் இவர்களுக்கு தேவை முடிவு மட்டுமே. உதாரணத்திற்கு கணக்கு போடும் போது அவர்கள் பதிலை மட்டும் யோசிப்பார்களே தவிர அதனை எப்படி கொண்டுவர வேண்டும் என்று சிந்திக்க மாட்டார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் அறிவுரை எப்பொழுதும் உணர்ச்சிவசத்தில் கூறுவதாக இருக்கும். மற்றவர்களின் தேவை என்னவென்பதை சரியாக சிந்தித்து இவர்களால் அறிவுரை வழங்க இயலாது. இவர்களிடம் ஒருவர் அறிவுரை கேட்கும் போது அவர்களின் நிலையில் தான் இருந்து சிந்தித்து பார்த்து அறிவுரை வழங்குவார்கள். தங்களின் சொந்த அனுபவத்தை கொண்டுதான் அறிவுரை வழங்குவார்கள். எனவே அவர்களின் அறிவுரைகளை கேட்கும்போது அதில் சில சந்தேகங்களை கேட்க வேண்டியது அவசியமாகும். இவர்கள் பொறாமை மற்றும் கோபத்தில் அறிவுரை கூறும்போது அது மிகவும் மோசமானதாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நிறைய விஷயங்களை பற்றி தெரியும், ஆனால் அவர்கள் அனைத்திலும் நிபுணர்களாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் நல்லதோ அல்லது கெட்டதோ இவர்களுக்கென தனி அபிப்பிராயமும், கருத்தும் இருக்கும். இது அவர்களின் அறிவுரைக் கூறும் திறனை பாதிக்கும். அவர்களுக்கு தெரியாத ஒரு விஷயத்தை பற்றி ஒருவர் இவர்களிடம் அறிவுரை கேட்கும்போது இவர்கள் தனக்கு தெரியாது என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள் மாறாக அதனைப்பற்றி தவறான அறிவுரைகளை கூறத்தொடங்கி விடுவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் கூறும் அறிவுரையை அவர்களே பின்பற்ற மாட்டார்கள்.

கும்பம்

யாராவது உணர்ச்சிவசப்பட்டால் அது கும்ப ராசிக்காரர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே அவர்கள் அந்த சூழ்நிலையை மாற்ற ஏதாவது ஒரு அறிவுரையை கூறிவிடுவார்கள். அது அந்த பிரச்சினைக்கு பொருத்தமானதாகவும் இருக்காது, பயனுள்ளதாகவும் இருக்காது. விஷயங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்களுக்கு நிறைய யோசனைகள் உள்ளன, மேலும் அவர்கள் கேள்விகளைக் கேட்கவோ அல்லது கூடுதல் தகவல்களைப் பெறவோ நேரம் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தங்களின் அறிவை பகிர்ந்துக் கொள்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். எனவே மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு கூறுவது அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக தவறான அறிவுரையை கூட வழங்குவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இப்படி தவறான அறிவுரை வழங்க காரணம் அவர்கள் மற்றவர்களுடன் இருப்பதை விட தங்களுடனேயே அதிக நேரம் இருப்பதுதான். அவர்கள் அறிவுரை கூறினால் அது அவர்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றது போல இருக்கும். அதிக உணர்திறனும், உணர்ச்சிவச படக்கூடியவர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் அவர்களின் கண்ணோட்டத்தில் மட்டுமே அறிவுரை வழங்குவார்கள். எப்பொழுதும் தங்களை போலவே மற்றவர்களும் சிந்திப்பார்கள் என்று நினைப்பார்கள், உங்களின் பிரச்சினைகளுக்கு ஏற்றார் போல அவர்களால் ஒருபோதும் சரியான அறிவுரை கூற இயலாது. அதையும் மீறி அவர்கள் கூறினால் அது தவறானதாகத்தான் இருக்கும்.

41 Shares