இணைய உலகோடு இணைக்கப்பட்ட மினியேச்சர் கண்காணிப்பு சாதனங்கள், உலகில் மிகவும் ஆபத்தான விலங்குகள் சில வேட்டையாடப்படுவதை தடுக்க உதவுகின்றன.

பிரஞ்சு தொழிநுட்ப நிறுவனமான Sigfoxஆல் உருவாக்கப்பட்ட சிறிய கண்காணிப்பு கருவியானது காண்டாமிருகங்களின் கொம்புகளில் பொருத்தப்படுகிறது.

இந்த கருவி, குறித்த காண்டாமிருகங்களின் இயக்கத்தை கண்காணிக்க உதவுகின்றது.

கடந்த நூற்றாண்டில் வேட்டையாடுதல் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக விலங்குகளின் உயிரினங்களின் எண்ணிக்கையில் வியத்தகு சரிவு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அழிவுக்கு அருகில் தள்ளப்பட்ட உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக வனவிலங்குகள் அமைப்பு இத்தகைய தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளன.

உலகளாவிய காண்டாமிருகங்களின் எண்ணிக்கை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 20,000ஆக குறைவடைந்திருந்தது.

ஆனாலும், பாதுகாப்பு முயற்சிகள் காரணமாக தற்போது 29,000க்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அழிவை எதிர்நோக்கியுள்ள விலங்குகளை பாதுகாப்பதற்கு பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்ற போதிலும், Sigfox இணையம் குறிப்பிட்ட குறைந்த அதிர்வெண் ரேடியோ சமிக்ஞையை பயன்படுத்துகிறது.

இது தற்போதுவரை பயன்படுத்தப்படும் ஏனைய கண்காணிப்பு சாதனங்களை விடவும் அதிக பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Shares