கேரளாவில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி 21 நாட்கள் காட்டுக்குள் தங்கியிருந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜார்ஜ் என்பவர் 18 வயது நிராம்பாத சிறுமியை காதலித்துள்ளார். தனது காதலை சிறுமியிடம் தெரிவித்ததையடுத்து அவரும் ஒப்புக்கொள்ளவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி, பெண்ணின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, அவர் தொடுபுழா அருகே உள்ள மலைப்பகுதியில் இருப்பது தெரிந்தது.

இருவரும் 3 வாரமாக காட்டில் தனியாக தங்கி, பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்துள்ளனர். இதனால், அவர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். பொலிசார் அவர்களை அழைத்து வந்தனர்.

ஆனால், பெண்ணின் பெற்றோர் அவரை ஏற்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து, பொலிசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜார்ஜை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இளம்பெண் கோட்டயத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.