தமிழகம்

வெறும் 10ஆம் வகுப்பு படித்தவருக்கு பல ஆண்டுகளாக பணம் கொட்டியது எப்படி~ விசாரணையில் வெளியான தகவல்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து அதிகளவில் பணம் சம்பாதித்து வந்த போலி மருத்துவர் வசமாக சிக்கியுள்ளார்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலி மருத்துவர் ஒருவர் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக ஆட்சியர் வினய்க்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தாக கூறப்படுகிறது.

அதன்படி, உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் சிவக்குமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தனியார் கிளினிக் நடத்தி வந்த சுந்தரபாண்டியன் என்பவர், பத்தாவது மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் நோயாளிகளிடம் சிகிச்சைக்கு கணிசமான தொகையை வசூலித்ததும் கண்டறியப்பட்டது.

இந்த போலி மருத்துவரை கைது செய்த மருத்துவக் குழுவினர், சாப்டூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோல போலியாக ஆங்கில மருத்துவம் பார்த்ததாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார் எனவும் தெரியவந்துள்ளது.

Related posts

தமிழகத்தில் மீண்டும் பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுப்பிரிவு எச்சரிக்கை

venuja

அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் என அவதிப்பட்ட 16 வயது மாணவி – மருத்துவ பரிசோதனையில் உண்மை வெளியானது!

venuja

நித்தியானந்தா வெளிநாட்டில் இருக்கும் நிலையில் அவர் ஆசிரமம் இடித்து நொறுக்கப்பட்டது !

மயூனு

Leave a Comment