கொழும்பு வெள்ளவத்தை மயூராபதி ஆலயத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற குழு மோதலில் 06 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களுக்குள் 3 பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த மோதல் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

78 Shares