கொழும்பு – வெள்ளவத்தை மயூராபதி கோவிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற குழு மோதல் தொடர்பில் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில் காயமடைந்த 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில் ஒருவர் வீடு திரும்பியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கட்டுமாணப் பணியில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களுக்கும், பிரதேச இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சி.சி.டீ.வி காணொளி ஊடாக மோதலில் ஈடுபட்டிருந்த ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கான முயற்சிகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

50 Shares