வவுனியாவில் நேற்று (16) மாலை வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்ட போதை ஒழிப்புப் பொலிஸார் பெண்ணின் கைப் பையில் கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவின் பொலிஸார் நேற்று மாலை வைத்தியசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவரை பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது பெண்மணியின் கைப் பையினுள் பொதி செய்யப்பட்ட 200கிராம் கேளரா கஞ்சாவினை மீட்டுள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த 45வயதுடைய பெண்ணே நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.