பாம்புக்கு பயப்படாதவர்கள் யார் இருக்க முடியும்? அதுவும் ராஜநாகம் என்றால் யார் தான் ஓடாமல் இருப்பார்கள். ஆனால் அப்பேர்பட்ட ராஜநாகத்தையே வளைத்துப் பிடித்து இரண்டு இளைஞர்கள் போட்டோ எடுத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தற்போது , சமூகவலைதளங்கில் உள்ள மூலை முடுக்கெங்கும் அந்த இரண்டு இளைஞர்களைப் பற்றிய பேச்சுத்தான் எதிரொலிக்கிறது. ஒரு இளைஞர் முதுகில் பேக்கை மாட்டிக்கொண்டு , காட்டுக்குள் நிற்க , இன்னொரு இளைஞர் கையில் எந்த ஆயுதமின்றி அந்த 15 நீள ராஜநாகத்தைப் பிடிக்க முயல்கிறார்.

அந்த ராஜநாகம் இருவரையும் கொத்த உஸ், உஸ் என தன் தலையை மின்னல் வேகத்தில் ஆட்டி, அவர்களைக் கொத்த வருகிறது. ஆனால் அந்தப் ராஜ்நாகத்துக்கே இருவரும் தண்ணி காட்டுவது போல் லாவகமாக தப்பித்தனர். கடைசியில் அந்த பாம்பு அப்பாவியாக நிற்க அந்த பாம்பின் வாயில் நச் என முத்தம் கொடுத்தார்.

அந்த சீற்றம் கொண்ட பாம்பு கப்சிப் என அமைதியாகிவிட்டாது.  ஆனால் இந்த வீடியோவை பார்த்தவர்  பலகோடி பட்ஜெட்டில் திகில் படம் பார்த்ததை விட இலவசமாகவே திரில் அனுபவம் பெற்றதாக கூறிவருகின்றனர்.   

16 Shares