தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி மண்ணில் வழமைக்கு மாறான ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது.அதாவது ஒரு மரத்தின் சகல கிளைகளிலும் தேனீக்கள் கூடுகட்டியுள்ளமை பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

இந்த அரிய காட்சியினைக் காண்பதற்காக தமிழ்மக்கள் பலரும் அவ்விடம்நோக்கிச் செல்வதாக கிளிநொச்சித் தகவல்கள் கூறுகின்றன.

தேனீக்கள் பெரும்பாலும் தனித்த இடத்தில் கூடுகட்டுவதையே விரும்புவன. அவை தமக்கென்று ஒரு எல்லையினை வகுத்திருப்பதனால் ஏனைய தேனீக்களை அருகில் அண்டவிடுவதில்லை.

தேன்கூடு என்பது, ராணிக் குளவியின் சாம்ராஜ்யமாக இருப்பதனால், இவ்வாறான சம்பவங்கள் உலகில் நிகழ்வது மிகவும் அரிதான காரியமாகும்.