இலங்கை

72வது சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்படாமல் தமிழ்மொழி புறக்கணிப்பு

இலங்கையின் 72வது சுதந்திர தினத்தில் இம்முறை தமிழில் தேசியகீதம் இசைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

2015ம் ஆண்டில் இருந்து தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது நிகழ்வின் இறுதியில் தேசிய நல்லிணக்கம் தொடர்பிலேயே தமிழில் தேசியகீதம் இசைக்கப்பட்டு வந்தது.

எனினும் பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த முறை சுதந்திர தின நிகழ்வில் தேசியகீதம் தமிழில் இசைக்கப்படாது என்று அரசாங்கத்தின் பலரும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட்டோர் இந்த கருத்தை அடிக்கடி கூறிவந்தனர்.

எனினும் எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழ் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே இன்றைய தேசிய சுதந்திரத்தின நிகழ்வில் தமிழில் தேசியகீதம் இசைக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சற்று முன் சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது~சுவிஸின் பகையை தேடிக்கொண்ட இலங்கை !

மயூனு

2 நாட்களிற்குள் முடிவில்லாட்டால்~எச்சரிக்கும் சஜித் ஆதரவாளர்கள் !

மயூனு

ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கியது~ 170 பேர் பலி~தாக்குதல் நடத்தப்பட்டதா!

மயூனு

Leave a Comment