வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி தொடர்பில் வடமாகாண ஆளுநரின் அதிரடி

வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை துரித கதியில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள...

யாழ் செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடந்த முகம் சுளிக்கவைக்கும் சம்பவம்

யாழ். வடமராட்சி செல்வச்சந்நிதி ஆலய தேர் உற்சவத்தின்போது தங்க ஆபரணங்கள் களவு போயுள்ளதாக ஆலய சூழலில் இருந்த வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 28 முறைப்பாடுகள்...

நான் ஜனாதிபதியானால் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பில் நிச்சயமான தீா்க்கமான நடவடிக்கைகளை எடுப்பேன்

நான் ஜனாதிபதியாக தோ்வு செய்யப்ட்டால் காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தீா்க்கமான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பேன். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை தாண்டியும் எனது நடவடிக்கை அமையும் –  மேற்கண்டவாறு அமைச்சா்...

முல்லைத்தீவில் யானைகளின் அட்டகாசம் – வீடுகளை உடைத்து சேதபடுத்தியதால் மக்கள் அச்சத்தில்

முல்லைத்தீவு பளம்பாசி கிராமத்தில் காட்டு யானைகளால்இரண்டு வீடுகள் உடைத்து சேதத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பளம்பாசி கிராமசேவகர் பிரிவில் கடந்த ஒரு மாத காலமாக...

வவுனியா இளைஞர் இந்தியாவில் அதிரடி கைது

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை ராமேஸ்வரம் பொலிஸார் இன்று (09. 09) கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய...

எழுக தமிழுக்கு ஆதரவுகோரி வலைப்பாடு கிராமத்தினருடன் சந்திப்பு! (படங்கள்)

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு கிராம மக்களுடன், வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவுகோரி தமிழ் மக்கள் பேரவையினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வலைப்பாடு கிராமத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களது அழைப்பின்பேரில் நேற்று இரவு 7 மணிக்கு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவை சார்பில் எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் சென்று கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள். வலைப்பாடு க.தொ.கூ.சங்க நிர்வாகிகள், வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகம் மற்றும் சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள், கிளி/76 பொன்னாவெளி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் ஜெகமீட்பர் சனசமூக நிலைய நிர்வாகிகள் பங்கேற்றிருந்த இச்சந்திப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் தமிழர்கள் தேசமாக அணிதிரள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருந்ததுடன் தமிழ்த்தேசிய அரசியல் போக்கு குறித்தும் மக்கள் இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தேசியத்தின் அபிலாஷையை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவர் யாரோ? அவருக்கே எமது ஆதரவு

தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்குமாகாண சபையில் நேற்று...

தமிழர்களின் சக்திகளான செல்வா, பிரபா, கூட்டமைப்பை உடைக்க சிலர் முயற்சி

தமிழர்களின் பேரம் பேசும் சக்தி பல துண்டுகளாக உடைந்தால் தமிழர்களின் இலட்சியப் பயணம் சிதைவடையும் அபாயம் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பளை பிரதேச அபிவிருத்திக்காக உதவும் காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் நிதி

காற்றாலை உற்பத்தி நிறுவனத்தின் மூலம் மாகாணசபைக்கு கிடைக்கப் பெறுகின்ற சமூக அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வீதிகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்று பெருமை சேர்த்த மன்னார் வீரர்கள்

வடமாகாண சபையின் ஏற்பாட்டில் கடந்த 07.09.2019 – 08.09.2019 வரை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மாகாண விளையாட்டு விழா நிகழ்வானது சிறப்பாக இடம்பெற்றது. குறித்த விளையாட்டு...