பூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து வர்த்தகர்களும் கடைகளை மூடி, வாகனப் போக்குவரத்தினையும் தவிர்த்து பாதிக்கப்பட்ட உறவுகளான நாங்கள் வடகிழக்கு இணைந்து ஏற்பாடு செய்துள்ள பூரண ஹர்த்தாலுக்கு இன மொழி, பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பின் தலைவி அ.அமலநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைா தினம் ஞாயிற்றுக்கிழமை (17) பகல் மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இச் சந்திப்பில் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தம்பிராசா செல்வராணி, கொக்கட்டிச்சோலை பிரதேச இணைப்பாளர் தவராசா பவானி ஆகியோரும் இணைந்திருந்தனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

எதிர்வரும் 19ம் திகதி கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை பூரண ஹர்த்தாலுடன் நடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். அன்றைய தினததில் அனைத்து வர்த்தகர்களும் கடைகளை மூடி, போக்குவரத்துகளையும் தவிர்த்து கல்லடிப் பாலத்தில் 19ம் திகதி காலை கவன ஈர்ப்புப் ரோராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மட்டக்களப்பு நகர காந்திப் பூங்கா வரை செல்லவுள்ளது. அந்தக் கவனஈர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்றைய தினம் நடைபெறவுள்ள பேரணியில் அனைத்து சமூகங்களும் இன மத பேதமில்லாமல், எல்லா அரசியல் தலைவர்களும் பர்குபாடுகள் இல்லாமல், அiனைத்து வரத்தவகர்களும் கடைகளை மூடி சர்வதேசத்திற்கு ஒரு நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.

ஐ.நாவில் நடைபெறும் 40 ஆவது கூட்டத்தொடரில் 20ம திகதி ,லங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு சென்று அழுத்தங்கொடுத்து, எங்களது உறவுகளை மீட்பதற்கும், எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிக் கொணர்வதற்கும் அனைத்து உறவுகளும் எங்களுடன் கரம் கோர்த்து ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தப் பேரணி மற்றும் ஹர்த்தாலுக்கு அனைத்துசர்வமதத் தலைவர்களும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்கள், அனைத்து அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மாதர் சங்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

கிழக்கில் மாத்திரமல்லாது வடக்கிலிருந்தும் தங்களது ஆதரவினைத் தெரிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள், இதில் வடக்கிலும் கடையடைப்பினை மேற்கொண்டு எமக்கு அதரவு தெரிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த விதத்தில் எங்களுடைய எங்களுடைய உறவுகளை மீட்பதற்கு ஒரு பலமிருப்பதாக உணர்கிறோம். இதே போன்று எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். திருகோணமலை, அம்பாறை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற அனைத்து மாவட்டங்களிலும் எங்களுக்கு ஆதரவு வழங்கி பூரண ஹர்த்தாலை அனுஷ்டித்து உதவவேண்டும் என்பதனைக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சபையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் ,காலப்பகுதியில் எதிர்வரும்; 20ம் திகதி மார்ச் 2019 அன்று இலங்கை மனித உரிமை விடயம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாது எனகோரியும் சர்வதேசத்தின் நேரடித்தலையீட்டினைக்கோரியும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றிணை 19ம் திகதி மார்ச் மாதம் 2019 அன்று மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து காந்தி பூங்காவரை நடைபெறவுள்ளது.